இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்


நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டு குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story