இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் அதானி குடும்பத்தின் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் பட்ஜெட் அமைந்துள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் மாதர், இளைஞர், மாணவர் ஆகியோரின் வாழ்க்கை நலனுக்கு எவ்வித உத்தரவாதமும் பட்ஜெட்டில் அளிக்கப்படவில்லை. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட குழு ஏ.சி.சாமிக்கண்ணு, எம்.நந்தி, ஆர்.முல்லை, தேவதாஸ், வேணுகோபால் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story