இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
வேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர துணைச் செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கொரோனா காலத்தில் ரெயில்வே பயணத்திற்கான முதியோர்களுக்கு வழங்கிய கட்டணச் சலுகை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான புதிய ரெயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட பொருளாளர் காவேரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சூரியா, அருள்குமார், மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story