இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் இறந்து வரும் நிலையில் இதனை தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் வட்டார துணை செயலாளர் கலைவாசகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இக்பால், மாவட்ட குழு உறுப்பினர் டிமிட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம், சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story