இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Sept 2023 5:30 AM IST (Updated: 14 Sept 2023 5:31 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, கம்பத்தில் கட்சியின் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 31 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story