இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்

விருத்தாசலம்:

கம்மாபுரம் ஒன்றியம் இருளக்குறிச்சியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், சுகாதார கழிவறை கட்டும் திட்டம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விருத்தாசலம் பாலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட செயலாளர் ராவணராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராமச்சந்திரன், தெய்வக்குமார், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு மணிவாசகம், மாநில குழு குளோப், மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாக குழு அறிவழகி, நகர செயலாளர் விஜய பாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.


Next Story