இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கஞ்சி தொட்டி முனை பகுதியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சேகர், மாவட்ட குழு சித்ரா, வட்ட செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் குப்புசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயிர் காக்கும் மருந்துகளின் விலையை 10 சதவீதம் உயர்த்தியதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிதம்பரம் போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் அவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்ததாக கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 80 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் ராவணராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராமச்சந்திரன், சின்னப்பராஜ், ராஜ்குமார், செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜங்ஷன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட நிர்வாகக் குழு சுப்பிரமணியன், அறிவழகி, சின்னதுரை, நிதிஉலகநாதன், முருகையன், விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.


Related Tags :
Next Story