கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் சிராஜ்கான் தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர், பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சென்று தங்க வைத்தனர்.


Next Story