கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட ராணிஅண்ணா காலனி, எம்.ஜி.ஆர். காலனி, ஏ.எஸ்.கே.டி.தங்கையாரோடு, முருகன் காலனி, புதுரோடு, பிச்சாண்டி தெரு, கே.கே.நகர், விஸ்வநத்தம், கண்ணகி காலனி, எம்.ஜி.ஆர்.நகர், போஸ்காலனி ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை தொழிலாளர்களுக்கு அவர்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்த சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியம், முருகன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் அதிகாரிகள் விரைவில் பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.


Next Story