சமூக விழிப்புணர்வு கூட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே காவல் துறை சார்பில் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் 'மக்களைத் தேடி மாவட்ட காவல் துறை' என்ற சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா முன்னிலை வகித்தார். போலீசார் பொதுமக்களிடம் பேசும்போது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், செல்போனில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, வங்கியில் இருக்கும் பண மோசடி, 18 வயதிற்கு குறைவான சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டால் போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறினர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் பொழுது தலையில் அடிபடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல் விழிப்புணர்வு கூட்டம் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, எம்.வாடிப்பட்டி போன்ற ஊர்களிலும் நடந்தது.