சமுதாய வளைகாப்பு விழா
புளியரையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
செங்கோட்டை:
புளியரை புதுவீட்டு அம்மன் கோவில் மண்டபத்தில் தென்காசி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட திட்ட அலுவலா் ஜோஸ்பின் சகாயபிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலா் பரக்கத்சுல்தானா, கண்காணிப்பாளா் சாகுல்ஹமீது, புளியரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிருஷ்ணபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனா். மேற்பார்வையாளா் அண்ணாமலை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சுமார் 125க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனா். அவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூலம் மற்றும் மதிய விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா்கள், மேற்பார்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.