சமுதாய வளைகாப்பு விழா


சமுதாய வளைகாப்பு விழா
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் ஆங்கிலப்பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையா பாண்டியன், சிவகிரி நகரப் பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு தாம்பூல தட்டு, டிபன் பாக்ஸ் பொருட்களை சொந்த செலவில் வழங்கி சிறப்புரையாற்றினர். வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அவர்களுக்கு வளைகாப்பு பொருட்கள், தாம்பூல தட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம் ஆகிய 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கவுன்சிலர் ரத்தினராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story