சமுதாய வளைகாப்பு விழா


சமுதாய வளைகாப்பு விழா
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:09+05:30)

தியாகதுருகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கே.கே. அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) கல்பனா அனைவரையும் வரவேற்றார். இதில் தியாகதுருகம் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், மருத்துவர் ராஜலட்சுமி, மேற்பார்வையாளர் மலர்கொடி, நிர்வாகிகள் நெடுஞ்செழியன், அப்துல் கபூர், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story