கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
குத்தாலம் அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே தேரழுந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, ஒன்றிய குழு துணை தலைவர் முருகப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை, சேலை வழங்கினார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.