கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
x

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

கரூர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா குளித்தலையில் நேற்று நடைபெற்றது. குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் நடந்த இந்த விழாவிற்கு குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சந்தன குங்குமம் பூசி வளையல் அணிவித்து வளைகாப்பு செய்து வைத்தார்.

இதில் குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சி மற்றும் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள சுமார் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் வளைகாப்பு உணவு வழங்கப்பட்டது. இதில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் நாகலெட்சுமி, குளித்தலை ஒன்றிய குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வினோதினி, அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story