கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
வால்பாறை
வால்பாறையில் நகராட்சி சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் ரதிபிரியா வரவேற்றார். பின்னர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 100 கர்ப்பிணிகளுக்கு பூ, மஞ்சள், பொட்டு, சந்தனம், வளையல், இனிப்பு அடங்கிய சீர்வரிசை வழங்ப்பட்டது. தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மலர் தூவி வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. அதிகளவில் வடமாநில கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கர்ப்ப காலத்தில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குறுநாடகமும் நடத்தப்பட்டது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய பகுதி சுகாதார செவிலியர்கள் தேவகி, சரஸ்வதி, நகராட்சி கவுன்சிலர்கள் வீரமணி, அன்பரசன், கலாராணி, பால்சாமி, கீதாலட்சுமி, கவிதா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நாகஜோதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் பல்வேறு வகையான உணவுகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.