சமுதாய வளைகாப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு


சமுதாய வளைகாப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

தூத்துக்குடி

உடன்குடி:

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் உடன்குடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், முபாரக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ரவிராஜா, மகாவிஷ்ணு, ஷேக் முகம்மது, உடன்குடி யூனியன் கவுன்சிலர் லெபோரின், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அன்புராணி, அபித், ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், அஜய், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி பக்கீர் உள்பட திரளான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story