50 சதவீத மானியத்தில் உரம் விற்பனை


50 சதவீத மானியத்தில் உரம் விற்பனை
x

தென்னையில் சத்து குறைபாட்டை போக்க 50 சதவீத மானியத்தில் உரம் விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,;

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 9100 எக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகிறார்கள். தென்னையின் வளர்ச்சிக்கும், நீடித்த மகசூல், மண்வளத்திற்கும் தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து போன்றவை மிக முக்கியமான மூலப்பொருட்களாகும். மேலும் கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, போரான், கார்பன், மாங்கனீசு போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தென்னையின் வளர்ச்சிக்கு அதிக பங்குவகிக்கின்றன. மேலும் கோடை காலங்களில் தென்னையில் போரான் சத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.போரான் சத்துக்குறைப்பாட்டை கட்டுப்படுத்த மரத்திற்கு 50 கிராம் போராக்ஸ் (வெண்காரம்) 2 முறை தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் அளிப்பதால் ஓலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சியடைகிறது. அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு மரத்திற்கு 200 கிராம் போராக்ஸ் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைப்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக நிவர்த்தி செய்யப்படுகிறது. மேலும் மண்ணில் போராக்ஸ் இடுவது மரத்திற்கு நீண்டகால பயனை அளிக்கும். தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் போரான் சத்துக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள பட்டுக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் போராக்ஸ் உரத்தினை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்படுகிறது.



Next Story