அழகிரி மணிமண்டபத்துக்கு சுற்றுச்சுவர்


அழகிரி மணிமண்டபத்துக்கு சுற்றுச்சுவர்
x

பட்டுக்கோட்டை, மார்ச்.19- பட்டுக்கோட்டை - தஞ்சை சாலையில் பாளையம் பகுதியில் உள்ள அழகிரி மணிமண்டபத்துக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து நகராட்சி 28-வது வார்டு அந்தோணியார் கோவில் தெருவில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அங்காடி கட்டுவதற்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் குமார், நகரமைப்பு அலுவலர் கருப்பையா, அழகிரி பேரன் சுப்பையா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை - தஞ்சை சாலையில் பாளையம் பகுதியில் உள்ள அழகிரி மணிமண்டபத்துக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து நகராட்சி 28-வது வார்டு அந்தோணியார் கோவில் தெருவில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அங்காடி கட்டுவதற்கு அண்ணாதுரை எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் குமார், நகரமைப்பு அலுவலர் கருப்பையா, அழகிரி பேரன் சுப்பையா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story