இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2026 5:27 PM IST
ஓ.பி.எஸ் தவெகவில் இணைவார் -கவிதா.ராஜேந்திரன் பேட்டி
ஓ.பி.எஸ், நிரந்தரமான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். நிச்சயம் அவரும் தளபதியோடு வந்து சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தளபதியும் அவரை அழைத்திருக்கிறார். சில நிர்பந்தங்கள் காரணமாக அங்கே இருக்கின்றார். இல்லையெனில் கடந்த ஜனவரி 1ம் தேதியே அவர் தவெக-வில் இணைந்திருப்பர் என தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் கவிதா.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
- 11 Jan 2026 5:25 PM IST
ஈரான் எச்சரிக்கை
"ஈரானை அமெரிக்கா தாக்கினால் பதிலுக்கு தாக்குவோம். அமெரிக்க கப்பல்கள் குறிவைக்கப்படும் என ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாப் கூறியுள்ளார்.
- 11 Jan 2026 5:23 PM IST
தனது பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு
தனது பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை கோரி நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' நிறுவனம் தனது உலகநாயகன் என்ற பட்டம், தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி டி சர்ட், சட்டைகளில் பயன்படுத்துவதாக கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.
- 11 Jan 2026 5:04 PM IST
கச்சததவு திருவிழா: ஜன. 15 முதல் விண்ணப்பம்
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15 - 25 வரைவிண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது. 5 - 70 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொள்ள முடியும்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27,28 நடைபெறுகிறது. வேர்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் விண்ணப்பம் பெற வேண்டும்.
- 11 Jan 2026 4:30 PM IST
பாஜகவுக்கு ‘ஸ்வாஹா’ பாடிட்டு வந்திருக்கோம் - செல்லூர் ராஜு
பாஜக கொடுத்த மனுவுக்கு நாங்கல்லாம் கூட போய் ‘ஸ்வாஹா’ பாடிட்டு வந்திருக்கோம் என செல்லூர் ராஜு கூறினார். ஜன.23ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவகலத்தில் மனு அளித்தபோது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்
- 11 Jan 2026 4:27 PM IST
5வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி
இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி
சச்சின் - 463 தோனி- 347 டிராவிட் - 340
அசாருதீன் - 334 |கோலி - 309 கங்குலி - 308
- 11 Jan 2026 4:24 PM IST
அன்புமணிக்கு உரிமை இல்லை - ராமதாஸ்
தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை; பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது என தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
- 11 Jan 2026 12:30 PM IST
போரூர் - வடபழனி இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் தொடங்கியது
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்ட வழித்தடமான போரூர் - வடபழனி இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பூந்தமல்லி - போரூர் இடையே சமீபத்தில் சோதனை முடிந்து பாதுகாப்புச் சான்று பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















