280 வழக்குகள் ரூ.2½ கோடிக்கு தீர்வு


280 வழக்குகள் ரூ.2½ கோடிக்கு தீர்வு
x

உடுமலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 280 வழக்குகள் ரூ.2½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

திருப்பூர்

தளி

உடுமலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 280 வழக்குகள் ரூ.2½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது.இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதாலத்) நடைபெற்றது.

3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.விஜயகுமார், உடுமலை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு 205-ல் 205 வழக்குகள் ரூ. 3 லட்சத்து 78 ஆயிரத்து 100-க்கும், காசோலை மோசடி வழக்கு 3-ல் 3 வழக்குககள் ரூ. 7 லட்சத்து 59 ஆயிரத்து 879-க்கும், வங்கி வராக்கடன் வழக்கு 680-ல் 23 வழக்குகள் ரூ. 39 லட்சத்து 35 ஆயிரத்து 18-க்கும் சமரச தீர்வு காணப்பட்டது.

தீர்வு

மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்கு 45-ல் 44 வழக்குகள் ரூ. 1 கோடியே 97 லட்சத்து 88 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்கு 22-ல் 5 வழக்குகள் ரூ. 8 லட்சத்து 52 ஆயிரத்து 823-க்கும் ஆக மொத்தம் 955 வழக்குகள் எடுக்கப்பட்டு 280 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 820-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல்கள் ராமலிங்கம், சேதுராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் வங்கி அதிகாரிகள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story