வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தினார்.

திருச்சி

மலைக்கோட்டை, மே.29-

திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் பாண்டியன், மாநில துணைத்தலைவர் செந்தில், திருச்சி மாவட்ட தலைவர் மா.பா.சின்னதுரை, மாவட்ட செயலாளர் சேகர்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டத்தின் போது, பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 5-ந்தேதி திருச்சியில் ஊர்வலம் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காயம் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

பால் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி பசும் பாலுக்கு குறைந்தபட்சம் ரூ.40, எருமைப் பாலுக்கு குறைந்தபட்சம் ரூ.50-ம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏரி, குளம், குட்டை, ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மணல் திருட்டை தடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்து விட்டதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story