வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி


வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
x

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

பேச்சு, கட்டுரைப்போட்டி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனின் புகழை பறைசாற்றும் வகையில், ஆண்டு தோறும் சுற்றுலாத்துறை சார்பில் வல்வில் ஓரி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது. இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு 'வல்வில் ஓரியின் சிறப்புகள்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் ஒன்றிய அளவில் நடத்தப்பட்டன.

சான்றிதழ்

இதில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது.

பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் தலா 30 பேர் என மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


Next Story