திருச்செங்கோட்டில் சேவலை துரத்தி பிடிக்கும் நூதன போட்டி
நாமக்கல்
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெருவில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவலை துரத்தி பிடிக்கும் நூதன போட்டி நடத்துவது வழக்கம். கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் சேவலை துரத்தி பிடிக்கும் போட்டி நடைபெற்றது. அதாவது ஒரு வட்டம் வரைந்து அதன் நடுவில் கண்களை கட்டியப்படி போட்டியாளரை நிற்க வைப்பர். பின்னர் கயிற்றின் ஒரு முனை போட்டியாளரின் காலிலும், மற்றொரு முனை சேவலின் ஒரு காலிலும் கட்டப்பட்டிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திக்குள் வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் அந்த சேவலை பிடிக்க வேண்டும். இந்த போட்டியில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Next Story