நாமக்கல் அருகே மாவட்ட சிலம்பம் போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு


நாமக்கல் அருகே மாவட்ட சிலம்பம் போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

உழைப்பாளர் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, மூத்த ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா, நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியில் நேற்று நடந்தது. சங்க செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜேந்திரகுமார் வரவேற்றார். தமிழரின் பாரம்பரிய சிலம்ப கலையின் அனைத்து விதமான குழு விளையாட்டுகள், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், புலியாட்டம், தீப்பந்தம், குத்து வரிசை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 22 அணிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. மேலும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிலம்ப ஆசான்கள் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.


Next Story