விழுப்புரம் மாவட்ட அளவில்பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கிப்போட்டி


விழுப்புரம் மாவட்ட அளவில்பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கிப்போட்டி
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கிப்போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நேற்று மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கிப்போட்டிகள் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக நடந்தது. போட்டியை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எட்வின் தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், சுந்தரமூர்த்தி, ஹேமலதா, பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பில்லூர், வளவனூர், சிறுவந்தாடு, மிட்டாமண்டகப்பட்டு, அற்பிசம்பாளையம், சித்தலம்பட்டு ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், விழுப்புரம் தூய இருதய மெட்ரிக் பள்ளி, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆக்கி குழுவினரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கிப்போட்டியும் நடந்தது. போட்டியின் முடிவில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசாக கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


Next Story