நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஓவியம், பேச்சுப்போட்டி


நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஓவியம், பேச்சுப்போட்டி
x

நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஓவியம், பேச்சுப்போட்டி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பாரதம் என்ற தலைப்பிலான ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் கார்த்தி, கார்த்திகாதேவி, நித்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கின் தீமைகள், தூய்மையின் நன்மைகள், காற்று மாசு, நீர் மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மாணவர்கள் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் அசோகன், திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் விஜய் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் தமிழ் ஆசிரியர் மகாராஜா நன்றி கூறினார்.


Next Story