நிதி நிறுவன மோசடியில் ஏமாற்றப்பட்டோர் புகார் அளிக்கலாம்


நிதி நிறுவன மோசடியில் ஏமாற்றப்பட்டோர் புகார் அளிக்கலாம்
x

நிதி நிறுவன மோசடியில் ஏமாற்றப்பட்டோர் புகார் அளிக்கலாம் என நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி

பாளையங்ேகாட்டை பெருமாள்புரம் காமராஜர் சாலை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் 2 முறை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும், முதலீட்டை இரட்டிப்பு ஆக்கி தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி பொது மக்களிடம் பணம் வசூல் செய்து உள்ளனர். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஆல்வின்பிரபு கொடுத்த புகாரின் பேரில் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ரகுநாத் என்ற சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் 3-வது எண்ணில் உள்ள நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேரில் அணுகி புகார் கொடுக்கலாம்.

இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story