வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு போலீசில் புகார்


வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி  முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

சிவகங்கை


வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

வீட்டில் இருந்தே...

தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 62). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.

அப்போது அவரது முகநூலில் வந்த ஒரு அறிவிப்பை பார்த்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய நபர் அண்ணாமலையிடம் வீட்டில் இருந்தபடியே பென்சில் பேக்கிங் செய்யும் தொழில் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

அதற்கு எந்திரம் மற்றும் அட்டைகள் போன்ற பொருட்கள் வாங்குவதற்கும், வரி செலுத்துவதற்கும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 930-ஐ பல தவணைகளில் செலுத்தியுள்ளார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் சந்தேகம் அடைந்த அண்ணாமலை இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அதற்கு முறையாக பதிலளிக்கவில்லையாம். இதை தொடர்ந்து தான் ஏமாந்ததை உணர்ந்த அவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story