தெரு நாய்குட்டியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார்
தெரு நாய்குட்டியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார்
சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மனைவி கீதா. இவர்களுடைய மகள் கவிதா. இவர்கள்மூவரும் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கீதா அவர்கள் வசிக்கும் வீதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவு வைப்பது வழக்கம்.
அதில் ஒரு நாய் 5குட்டிகளை பிரசவித்துள்ளது. கீதா அந்த குட்டிகளுக்கும் உணவு வைத்துள்ளார். இந்தநிலையில் அதே வீதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி (70), சந்திரசேகரன் (68) ஆகியோர் தெரு நாய்களுக்கு உணவு வைக்க கூடாது.நீங்கள் உணவு வைப்பதால் எங்கள் வீட்டின் முன்பு தெரு நாய்கள் அசுத்தம் செய்கிறது என்று கூறியுள்ளனர் அதற்கு கீதா அப்படித்தான் உணவை வைப்பேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.அதனால் நாய்க்குட்டி படுகாயம் அடைந்தது. இதை தொடர்ந்து கீதா அந்த குட்டியை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாய் குட்டியை தாக்கியதாக கீதாவின் மகள் கவிதா கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி,சந்திரசேகர் உள்ளிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.