முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் போலீசில் புகார்
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தங்கமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.இதேபோன்று தொடர்ந்து பல முறை பேசி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுருளிராஜன், முல்லைவேந்தன், வெல்டிங்ராஜா, பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story