சிறுமி கடத்தல்; வாலிபர் மீது புகார்


சிறுமி கடத்தல்; வாலிபர் மீது புகார்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி சம்பவத்தன்று, தையல் கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story