போலி மதுபான விற்பனை குறித்து:புகார் தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு


போலி மதுபான விற்பனை குறித்து:புகார் தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 88383 52334 என்ற செல்போன் எண்ணின் மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். இந்த எண்ணானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story