பணிசெய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் மீது புகார்


பணிசெய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் மீது புகார்
x

கிராம நிர்வாக அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்த 2 பெண்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யாவிடம் நேற்று மாலை 3.30 மணி அளவில் அதே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் தங்களது தந்தைக்கு வாரிசு சான்று வழங்கப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சவுந்தரராஜன் ஆகியோரை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில், தாசில்தார் குமார் தலைமையில் புகார் மனு கொடுத்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story