புகார்பெட்டி


புகார்பெட்டி
x

புகார்பெட்டி

கோயம்புத்தூர்

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

பொள்ளாச்சி-பல்லடம் மெயின்ரோட்டில் சுல்தான்பேட்டை செல்லும் வழியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முக்கிய இடங்களில் தெருவிளக்குகள் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமஸ், சுல்தான்பேட்டை.

பஸ் வசதி வேண்டும்

கூடலூர் அருகே உள்ள காலியோடு, போத்துகொல்லி உள்ளிட்ட கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இந்த பகுதிக்கு பஸ் வசதி செய்துகொடுக்க ஆவண செய்ய வேண்டும்.

சுரேஷ், கூடலூர்.

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

கோவை-அவினாசி ரோடு அண்ணா சிலையில் இருந்து சித்தாப்புதூர் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், கோவை.

குண்டும், குழியுமான சாலை

கோத்தகிரி அருகே காத்துக்குளி கிராமத்தில் இருந்து வள்ளுவர் காலனிக்கு செல்லும் சாலையில் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபு, கோத்தகிரி.

டவுன் பஸ் முறையாக இயக்கப்படுமா?

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளையில் இருந்து சோமனூருக்கு 32-ம் நம்பர் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. முன்பு இந்த டவுன் பஸ் ஒருநாளுக்கு 5 முறை இயக்கப்பட்டது. ஆனால் தற்போது சோமனூருக்கு 2 முறை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஸ்சை முறையாக இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, சோமனூர்.

விபத்து அபாயம் (படம்)

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் பின்புறம் வெங்கடேசா காலனி உள்ளது. இங்கு வாட்டர் டேங்க் ரோட்டில் பாதாள சாக்கடை குழிக்கு போடப்பட்ட மூடி பாதியளவு மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதனால் சாலையின் நடுவே ஏற்பட்ட அபாய குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். மேலும் அபாய குழியை கவனிக்காமல் இருசக்கர வாகங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பழைய மூடியை அகற்றிவிட்டு, புதிய மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், பொள்ளாச்சி.

சிக்னல் அமைக்க வேண்டும்

கோவை மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேம்பாலத்திற்கு அடியில் 4 முனை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிசந்திரன், சித்தாபுதூர்.

இருளில் மூழ்கிய பார்க்கேட் சாலை

கோவை மத்திய சிறை முன்பு உள்ள பார்க்கேட் சாலையில் தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. சில தெருவிளக்குகளை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளது. இதனால் பார்க்்கேட் சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இருசக்கரம் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், காந்திபுரம்.

சுகாதார சீர்கேடு

பீளமேடு மேம்பாலத்தை அடுத்து தண்ணீர் பந்தல் ரோட்டில் இருந்து காந்திமாநகருக்கு செல்லும் வழியில் உள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் சிலர் சாலையோரத்தில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இந்த குப்பைகளை இரவு நேரங்களில் நாய்கள் இழுத்து சாலையில் போட்டுவிட்டு செல்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன், பீளமேடு.

சாலை சீரமைக்கப்படுமா?

கோவை பி.கே.புதூர் அண்ணாநகர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அண்ணாநகர் பகுதியில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக்கேயன், பி.கே.புதூர்.


Next Story