'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மயிலாடுதுறை

'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவிளக்கு ஒளிருமா?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் பகுதி எம்.ஜி.ஆர் நகரில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா.

-பொதுமக்கள், விசலூர்.


Next Story