'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாக்கடை கால்வாய் வேண்டும்

திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலை, அஞ்சலி பைபாஸ் மற்றும் திருச்சி பைபாஸ் சாலை இணையும் இடத்தில் கழிவுநீர் வெளியேற சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இங்குள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், திண்டுக்கல்.

தடுப்புச்சுவர் சேதம்

பெரியகுளம் தென்கரை பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. தடுப்புச்சுவர் முழுவதும் சேதமடைந்தால் உயர்கோபுர மின்விளக்கை தாங்கி நிற்கும் கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ராஜ், தென்கரை.

குப்பைகளை எரிப்பதால் புகைமூட்டம்

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளிச்செல்லாமல் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயபாலா, சிவகிரிப்பட்டி.

மின்விளக்குகள் எரிவதில்லை

பழனி பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் நடைமேடையில் காத்திருக்க அச்சப்படுகின்றனர். சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. எனவே மின்விளக்குகளை பழுதுநீக்கி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், பழனி.

தாழ்வாக செல்லும் மின்கம்பி

பழனியை அடுத்த புதுஆயக்குடி 16-வது வார்டு பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் மீது மின்கம்பி உரச நேர்ந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- 16-வது வார்டு மக்கள், ஆயக்குடி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டி சத்யாநகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் முறையாக செல்ல வழியின்றி சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்ததால் இரவில் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல்முருகன், ஆண்டிப்பட்டி.

டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?

செம்பட்டியில் இருந்து அம்பாத்துரைக்கு செல்லும் சாலையில் புதுகோடாங்கிபட்டி அருகே சாலையோரத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வரும் நபர்கள், சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கனி, செம்பட்டி.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Related Tags :
Next Story