புகார் பெட்டி

புகார் பெட்டி
அகற்றப்பட்டது
உசரவிளை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் நடப்பட்டது. ஆனால், பழைய மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகளை அகற்றி விட்டு இரும்பு கம்பிகளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரும்பு கம்பிகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பேயன்குழி இரட்டை கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பாலப்பணி மந்தகதியில் நடைபெறுவதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமலும், பேயன்குழியில் இருந்து வில்லுகுறி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விவசாயிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஷ், பேயன்குழி.
சீரான குடிநீர் தேவை
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையடி, இடையன்விளை, கவர்குளம், தேரிவிளை, வெள்ளையன்தோப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 2 முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாரத்திற்கு 2 முறை சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், சந்தையடி.
சுகாதார சீர்கேடு
திங்கள்நகர் மீன்சந்தையின் அருகில் சார் நிலை கருவூலம், வணிக வளாகங்கள் உள்ளதால் எப்போது ஆட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மீன்சந்தையில் உள்ள கழிவுகளை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சந்தையில் உள்ள மீன் கழிவுகளை தினமும் அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.
விபத்து அபாயம்
பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளதில் கான்கிரீட் சிலாப்புகள் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், கணியாகுளம்.
வடிகால் ஓடை தேவை
அருமனை பஞ்சாயத்தில் மஞ்சாலுமூடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மழுவன்சேரி பகுதியில் கழிவுநீர் ஓடையில் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர், கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி அந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், மழுவன்சேரி.






