தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுபகுதியில் உள்ள வேகத்தடையை பெரிய கற்கள் வைத்து ஆபத்தான முறையில் மறைத்துள்ளனர்.இந்த வேகத்தடையால் வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் வேகத்தடையில் உள்ள கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ச.மேட்டுத் தெரு, மதுரை

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மதுரை மாவட்டம் செல்லூர்-பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

அச்சுறுத்தும் பாதாள சாக்கடை

மதுரை ஜீவா நகர் 2வது தெருவில் தனியார் பள்ளி எதிரில் உள்ள பாதாள சாக்கடை தூர்ந்து போய் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமரன், ஜீவாநகர், மதுரை.

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் தபால் தந்தி நகர் வரை உள்ள முக்கிய சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் பல முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களும் பொதுமக்களும் இச்சாலையில் பயணிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கா.தமிழ்மாறன், பி.பி.குளம்.

பஸ் வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து சாப்டூர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வல்லவராஜா, சாப்டூர்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வெள்ளையம் பட்டி கிராமம் எஸ்.இ.காலனி தெருவில் கழிவுநீர் சாலையின் இரு புறங்களிலும் செல்கிறது. இந்த கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்னமயில், அலங்காநல்லூர்.


Next Story