புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை செல்லும் சாலையில் முதுகுளத்தூர் அருகே சாலையின் சில இடங்கள் சேதமடைந்து மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முதுகுளத்தூர்.
விளையாட்டு மைதானம் தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி அருகே சேரங்கை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட மைதானம் இல்லாததால் சாலையில் வந்து விளையாடுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்தப்பள்ளியில் மாணவர்கள் பள்ளியின் உள்ளேயே விளையாட மைதானம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், கடலாடி.
அச்சுறுத்தும் நாய்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மடை பஞ்சாயத்து வன்னிக்குடி கிராமத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் சிலரை கடித்தும் வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆர்.எஸ்.மடை.
மீனவர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுகம் பகுதியில் போதிய அளவு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மண்டபம்.
ஊருணி தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் அறனூற்றிமங்கலம் பஞ்சாயத்து மேட்டுக்கற்களத்தூர் கிராமத்தில் கோனார்தம்மம் ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நீராதாரத்திற்கு உதவி வரும் இந்த ஊருணியில் கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊருணியில் அடிக்கடி நீர் வற்றி விடுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அறநூற்றி மங்கலம்,