புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

ராமநாதபுரம்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தேரங்குளம் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

ஜெயானந்தன், தேரங்குளம்.

வாகன ஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி செல்லும் சாலை சேதமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

உமா, திருப்புல்லாணி.

மின்தடையால் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கடலூர் ஊராட்சி மோர்பண்ணை கிராமத்தில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜதுரை, ஆர்.எஸ்.மங்கலம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தின் நடைமேடையில் ரெயில் பெட்டிகள் நிற்குமிடத்தை காட்டும் மின் பலகைகள் செயல்படாமல் உள்ளதால் பயணிகள் சிறமப்படுகின்றனர். ரெயில் வந்தபின் குழந்தைகளையும் உடமைகளையும் தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைய நேரிடுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் பலகைகளை அகற்றி புதிதாக பொருத்த வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

பயன்பாட்டிற்கு வராத வரத்து கால்வாய்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே து.கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாயில் வரத்து கால்வாய் கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து கால்வாயை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.


Related Tags :
Next Story