புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

ராமநாதபுரம்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அதிகாரிகள் கவனிப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் ஊராட்சி பேச்சி ஊருணி கரையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனி, ஆனந்தூர்.

செய்தி எதிரொலி

ராமநாதபுரம் மாவட்டம் ராசிங்கமங்கலம் தாலுகா ஆய்ங்குடி பஞ்சாயத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது சாலை சரிசெய்யப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், ராசிங்கமங்கலம்.

மின்வயர்களை உரசும் மரக்கிளைகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலியில் உள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி மரக்கிளைகள் மின்வயர்களில் உரசியபடி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விபரீதம் ஏதும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு முன்பு மரக்கிளைகளை வெட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூர்தீன், தேரிருவேலி, ராமநாதபுரம்

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து உரக்குழி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் வாகனங்கள் செல்வதால் பழுதாகி விடுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

நடவடிக்ைக ேதவை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் சில அதிகாரிகள் உரிய முறையில் பணிக்கு வராததால் மக்கள் திட்டப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.


Related Tags :
Next Story