புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையில் மழைநீரானது தேங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், வில்லாபுரம்.
ஒளிராத தெருவிளக்கு
மதுரை மாநகராட்சி 23-வதுவார்டு கீழகைலாசபுரம் 2 -வது தெரு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. ஆகவே அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
சேறும், சகதியுமான சாலை
மதுரை மாவட்டம் கூடல்புதூர் டி.என்.எச்.பி. காலனியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பிற்காக சாலையானது தோண்டப்பட்டது. இந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் சகதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
ஹரிவிக்னேஷ், கூடல்புதூர்.
இருளில் மூழ்கும் பகுதி
மதுரை மாவட்டம் அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இதன் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் முன்னே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் எரியாத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிதாக பொருத்த வேண்டும்.
பொதுமக்கள், அண்ணாநகர்.
தார்ச்சாலை வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் 39, 40-வது வார்டு யாகப்பாநகர் மற்றும் வண்டியூர் பகுதி சாலை மண் ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையில் வாகனங்களை இயக்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், வண்டியூர்.