புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்நடைகளால் இடையூறு

மதுரை மாவட்டம் கான்பாளையம் குறுக்கு மற்றும் 1-வது தெரு முதல் 5-வது தெரு வரை கால்நடைகளின் தொல்லை அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் மாடுகள் முட்டியதில் பொதுமக்கள் காயமடையும் நிலையும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்த்தசாரதி, கான்பாளையம்.

எரியாத தெருவிளக்குகள்

மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பர்புரம் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூர்யா, மதுரை.

தேங்கி நிற்கும் மழைநீர்

மதுரை மாவட்டம் உத்தங்குடி எஸ்.எஸ்.நகருக்கு உட்பட்ட ரிங் ரோடு முதல் பாண்டிகோவில் வரையிலான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே இந்த மழைநீரை ரிங் ரோட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள வண்டியூர் கண்மாய்க்கு செல்லும் வகையில் வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சையத்பஷீர் அகமத், உத்தங்குடி.

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் வி.கரிசல்குளம் ஐ.ஓ.சி. நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வி.கரிசல்குளம்.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள சாலையில் வளைவான பகுதியில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில சமயம் விபத்தும் நடக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.

ஜோதிலிங்கம், சத்திரவெள்ளாளபட்டி.


Related Tags :
Next Story