புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அருண், பேரையூர்.

ரேஷன் கடை கட்டிடம் வேண்டும்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ரேஷன்கடை சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சந்தனகுமார், மதுரை.

நோய் பரவும் அபாயம்

மதுரை சோழையழகுபுரம் இந்திரா நகர் 6- வது குறுக்கு தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் நிரம்பி வெளியேறி நடைபாதையில் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திபாரதி, அலங்காநல்லூர்

வேகத்தடை அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி-பேரையூர் ரோட்டில் உள்ள பள்ளி முன்பு வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் அதிக விபத்துகள் இந்த சாலையில் நடக்கிறது. வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், உசிலம்பட்டி


Related Tags :
Next Story