புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

சிவகங்கை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கிடப்பில் பராமரிப்பு பணி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மதுரை-தொண்டி சாலையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் கிடப்பில் உள்ள பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஊருணியில் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருக்கலாபட்டியில் உள்ள ஊருணியில் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த நீர்நிலையானது மாசடைந்து காணப்படுகிறது. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வழிவகுக்கிறது. எனவே இந்த ஊருணியை தூர்வாரி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

தார்ச்சாலை வேண்டும்

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்றிகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செஞ்சைபாப்பா ஊருணி 34 மற்றும் 35-வது வார்டு சாலைகளில் பன்றிகள் அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சாலையில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

தேங்கிய கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம சிங்கம்புணரியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Related Tags :
Next Story