புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

ராமநாதபுரம்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் வேந்தோணி புறவழிச்சாலை சேதமடைந்து உள்ளது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், பரமக்குடி.

இடிந்து விழும் நிலையில் சமுதாயகூடம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முதுனாள் கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் மிகவும் மோசமான‌ நிலையில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடமாக உள்ளது. எனவே புதிய சமுதாய கூட கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்குமார், முதுனாள்.

தரம் உயர்த்தப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பகலில் கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், கீழக்கரை.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைக்குளம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் இந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி கட்டிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், கமுதி.

கால்நடைகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காளையார்கோவில்.

வாகன ஓட்டிகள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மனோகர், எஸ்.புதூர்.

மாணவர்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் பயணிக்கும் வாகனஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிவண்ணன், காரைக்குடி.

குண்டும் குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை பெயர்ந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் பயணிப்பது மிகுந்த சிரமமாகவே உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், திருப்புவனம்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கொங்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி, இளையான்குடி.


Related Tags :
Next Story