புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
விருதுநகரின் மையப்பகுதியில் மெயின்பஜார் உள்ளது. இந்த பஜாரில் தினமும் எண்ணற்ற வியாபாரிகள், பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். இந்நிலையில் இந்தப்பகுதியில் உள்ள சாலை குறுகிய நிலையில் உள்ளதால் வாகனங்கள் சென்று வர முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், விருதுநகர்.
சேதமடைந்த மயான கட்டிடம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொது மயான கட்டிடம் விரிசலடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.இதனை சரியான முறையில் பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், சிவகாசி.
பூங்கா அமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டில் பூங்கா இ்ல்லை. இந்த பகுதியில் பூங்கா அமைத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவர். எனவே மேற்கண்ட பகுதியில் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செட்டியார்பட்டி.
விபத்து அபாயம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடைபாதையினருக்கும் கால்நடைகளால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன், ராஜபாளையம்.
நிழற்குடை தேவை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும் மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, காரியாபட்டி.