புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அங்கன்வாடி கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா?
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். முகமது சலீம், புதுமடம்.
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே கே.வலசை கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ், போகலூர்.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தெற்குதோப்பு 14-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கி.மீட்டர் தூரம் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை சரியான முறையில் வினியோகிக்க வேண்டும்.
மாறன், தெற்குதோப்பு.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விழாக்காலம் நேரம் வருவதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், ஆர்.எஸ்.மங்கலம்,
பராமரிப்பற்ற நிலையில் பூங்கா
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார பூங்கா வளாகம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதன் காரணமாக பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்பூங்கா வளாகத்தை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சேறும், சகதியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராம சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.
ஜஸ்டின், இளையான்குடி.
வாகன ஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். ஜெயசூரியா, கல்லல்.
சாலை வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை இலுப்பகண்மாய் கரையில் சாலை வசதி இன்றி மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சாலை போட வேண்டும். ஜாபர் அலி, சிங்கம்புணரி.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்க பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பள்ளிக்கு எதிரே செடி, கொடிகளுடன் புதர் மண்டி காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சுமி, காரைக்குடி.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிருங்காகோட்டை 8-வது வார்டு ஊர்சாவடி அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாயின் கீழ் சிமெண்டு தளம் கிடையாது. இதனால் நீரானது தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழாயின் கீழ் சிமெண்டு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவபிரகாசம், கிருங்காக்கோட்டை.