தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
கால்வாய் அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி டி.இ.எல்.சி. சர்ச் எதிர்தெருவில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் நீரானது சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் தொற்றுநோய் பரப்பி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்றி இப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.
சிவக்குமார், முதுகுளத்தூர்.
பள்ளி குழந்தைகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் இதம்பாடல் கிராமத்தில் உள்ள பள்ளிச்சாலை மண்ரோடாக உள்ளது. இதனால் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு இயலாத சாலையாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துடன் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாந்த், கீழக்கரை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் நகரில் ரெயில்வே பீடர் சாலை, அண்ணாநகரை இணைக்கும் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீரானது சிலநாட்களாக வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தேங்கிய கழிவுநீரால் சிரமப்படுகிறார்கள். மேலும் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
தேங்கிய கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அய்யப்பன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. இதனால் மழை பெய்தால் சாலையில் கழிவுநீர் வெளியேறி மழைநீரோடு கலந்து அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுத்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாருகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஷ்வின், கேணிக்கரை.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிலநாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. நல்ல தண்ணீர் கிடைக்காமல் சிலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செபாஸ்டியன், கமுதி.